Students can apply for scholarships to minority interest – district collector information.

இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது:

scholarship-graduation-cap தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11, 12-ம் வகுப்பு, ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக், பட்டயப் படிப்புகள், இளங்கலை (ம) முதுகலை பட்டப்படிப்புகள், எம்பில், ஆராய்ச்சிப் படிப்பு ஆகியவற்றை பயிலும் கிறித்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (Postmatric Scholarship) திட்டத்தின் கீழ் 2016-2017-ஆம் ஆண்டில் www.scholarships.gov.in ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலவரம்பு 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயில்பவர்களுக்கு 31.08.2016-க்குள்ளும் மற்றும் இதர படிப்புகளான டிப்ளமோ, ஐ.டி.ஐ, பட்டப்படிப்புகளுக்கு 31.10.2016 வரை நிh;ணயிக்கப்பட்டுள்ளது. மைய அரசால் தமிழ்நாட்டிற்கு; 2016-2017-ஆம் ஆண்டிற்கு இலக்காக மொத்தம 18,989 மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை நிh;ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டு பொது தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.

பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ.2.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஆதார் எண் கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டும்.

www.scholarships.gov.in , என்ற புதிய இணையதள முகவரியில் Online மூலம் விண்ணப்பித்து இணைப்புகளை அப்லோடு (upload) செய்து மாணவ, மாணவியர்கள் பதிவு செய்யப்பட்ட அவ்விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், வருவாய்துறையிடமிருந்து பெற்ற மதத்திற்கான சான்று மற்றும் வருமான சான்றிதழ் அல்லது சுய சான்று ஆகியவற்றின் நகலுடன், கல்விக்கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, வங்கி கணக்கு எண்(Core Bank Service Account Number, IFS Code) ஆகிய விவரங்களுக்கான ஆவணங்களை இணைத்து அவர்கள் பயிலும் கல்வி நிலையங்களில் 31.10.2016-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒப்பளிக்கப்படும் கல்வி உதவித்தொகைகள் மாணவ-மாணவியர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படவுள்ளதால் சரியான வங்கி கணக்கு எண் மற்றும் வங்கி குறியீடு எண் (IFS Code) விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். வங்கி விவரங்களை தவறாக அளிக்கும் பட்சத்தில் மாணவ, மாணவியரின் கல்வி உதவித்தொகை நிராகரிக்கப்படும்.

மேற்படி, ஆன்லைன் மூலம் மாணவ, மாணவியர்களால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை கல்வி நிலையங்கள் அவ்வப்போது பரீசீலித்து தகுதிபெற்ற விண்ணப்பங்களை 31.10.2016-க்குள் ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டும்.

சிறுபான்மையின மாணவ, மாணவியா;கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் Online மூலம் விண்ணப்பித்து பயனடைய வேண்டும்.
என தெரிவித்துள்ளர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!