ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகளில் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா!

schedule
2021-11-24 | 15:04h
update
2021-11-24 | 15:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Students can apply to join SC – ST Welfare Hostels – Perambalur Collector Venkatapriya!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

2021-2022 ஆம் கல்வி ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்டத்தில் 20 ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளும், 14 ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகளும், 1 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியும், 3 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதிகளும், 1 பழங்குடியினர் நல மாணவியர் விடுதியும், 1 பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி விடுதியும் என ஆக மொத்தம் 40 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

Advertisement

இவ்விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் உணவும், உறைவிடமும் இலவசமாக வழங்கப்படும், மேலும் இலவசமாக 4 இணைச் சீருடைகளும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகளும் வழங்கப்படும். இவ்விடுதிகளில் சேருவதற்கு மாணவ, மாணவியர்களின் பெற்றோர் அல்லது அவர்களுடைய பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- மிகாமல் இருக்க வேண்டும்.

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்கள் விடுதியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். மாணவர்களுக்கு தங்களது இருப்பிடத்திற்கும்; பள்ளிக்கும் இடைவெளி 5-கி.மீ க்கு மேல் இருக்க வேண்டும். மாணவியர்களுக்கு இந்த விதி பொருந்தாது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தாங்கள் சேரும் விடுதியில் விண்ணப்பங்களை பெற்று சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் 30.11.2021 மாலை 05.00 மணிக்குள்; ஒப்படைக்க வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரி, நிர்வாகத்திடம் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி கல்வி நிறுவன சான்றொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர், மாணவியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 16:20:29
Privacy-Data & cookie usage: