மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் கல்வி உதவித் தொகை: பெரம்பலூர் கலெக்டர் தகவல்

schedule
2022-11-29 | 13:46h
update
2022-11-29 | 13:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Students studying in Central Government Institutions get Rs. 2 Lakh Scholarship: Perambalur Collector Information

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளுக்கு 2022-2023ம் ஆண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

Advertisement

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ / மாணவியர்களில் கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித் தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களையோ அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship schemes என்ற இணையதள முகவரியிலிருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தினை, மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து கீழ்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 31.01.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்,எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5, தொலைபேசி எண் :044-29515942 மின்னஞ்சல் முகவரி : tngovtiitscholarship@gmail.co

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 09:59:39
Privacy-Data & cookie usage: