பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்விற்கு (NTS) விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் முதன்மைக்கல்வி அலுவலர்

schedule
2016-08-20 | 05:16h
update
2026-06-28 | 03:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Students studying in Class X, examinations NTS apply : Perambalur CEO

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளதாவது:

2016-2017 ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு (NTS) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

Advertisement

விண்ணப்பங்களை www.tngdc.gov.in என்ற இணையதளம் மூலம் 18.08.2016 முதல் 31.08.2016 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50- ஐயும் சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 31.08.2016 -க்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது.

மேலும், www.tngdc.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 03:19:34
Privacy-Data & cookie usage: