பெரம்பலூரில் 2 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு; 38 பவுன் ரொக்கம் ரூ. 7.50 லட்சம் திருட்டு!

schedule
2022-02-01 | 06:24h
update
2022-02-01 | 06:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Successive burglary of 2 houses in Perambalur; 38 pound cash Rs. 7.50 lakh theft!

பெரம்பலூரில் இரண்டு வீடுகளில் சுமார் 38 பவுன், ரொக்கம் ரூ. 7 லட்சத்து 55 ஆயிரம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள டால்பின் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சிவபெருமாள் மகன் குமரன் (வயது 49). இவர் பெரம்பலூர் தினசரி காய்சரி மார்க்கட்டிலும், வார நாட்களில் கிராமங்களில் நடக்கும் சந்தைகளிலும், காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

Advertisement

நேற்று வழக்கம் போல் சந்தை வியாபாராத்திற்கு சென்று விட்டார். இவரது மனைவியும் பெரம்பலூர் மார்க்கட்டிற்கு காய்கறி வியாபாரம் செய்து வரும் நிலையில் நேற்று இவரும் பக்கத்து கடைக்காரர் இறந்து விட்டதால் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.

குமரனும் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, இன்று காலை வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கபட்டு, வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் 35 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் பணமும் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து காய்கறி வியாபாரி குமரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதே போன்று, அதே பகுதியில் வசித்து வாடகை வீட்டில் வருபவர் ராமடூ மகன் செல்வராஜ் (வயது 40), இவரது சொந்த ஊரான கை.களத்தூரில் பால்பண்ணை நடத்தி வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி காரியானூரில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

சொந்த ஊரான கை.களத்தூருக்கு சென்று விட்டு, இன்று காலை பள்ளிகள் திறப்பதால், பெரம்பலூருக்கு இன்று காலை குழந்தைகளுடன் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைத்து கிடப்பதும், வீட்டினுள் இருந்து சுமார் இரண்டே முக்கால் பவுன் மற்றும் ரொக்கம் ரூ. 5 ஆயிரம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரிலும், பெரம்பலூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தொடர் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 15:43:19
Privacy-Data & cookie usage: