பெரம்பலூர் அருகே வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர் திடீர் மரணம்!

schedule
2020-01-03 | 06:26h
update
2020-01-03 | 06:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Sudden death of a victorious Panchayat President near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் ஆதனூர் பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றவர் மணிவேல், உடல்நலக்குறைவால் அதிகாலை 5 மணி அளவில் இறந்தார். இவர் ஆட்டோ ரிக்ஷா சின்னத்தில் போட்டியிட்டு 962 வாக்குகள் பெற்றார் எதிர்த்து போட்டியிட்டவர் விட 166 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு ஜோதிமணி,55, என்ற மனைவியும், குமார்,48/ சரஸ்வதி,45, அன்புச்செல்வன்,43, ஆனந்தி,40, ரமேஷ்,38, ஆகிய 6 பிள்ளைகள் உள்ளனர். சளி இருமலால் கடந்த இரண்டு நாட்களாக அவதிபட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று அதிகாலை 5 மணியளவில் இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து இவரது குடும்பத்தினர் அரியலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றவர் சான்றிதழ் பெற்ற மறுநாளே இறந்த இச்சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 11:37:29
Privacy-Data & cookie usage: