பெரம்பலூரில் கரும்பு விவசாயிகள் அதிகாரிகள் முன்பு நூதன போராட்டம்

schedule
2017-12-21 | 12:59h
update
2026-07-04 | 14:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Sugarcane farmers officers in Perambalur previously had a protracted struggle

பெரம்பலூர் ஜவர்கர்லால் நேரு சர்க்கரை ஆலை ஆண்டு பேரவை கூட்டத்தில் விவசாயிகள் எழுந்து நின்று காதைபொத்திக் கொண்டு வாயை மூடிக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜவர்கர்லால் நேரு சர்க்கரை ஆலையின் 40வது ஆண்டு பேரவை கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கடந்த ஆண்டு வெட்டி அனுப்பிய கரும்புக்குரிய நிலுவை தொகை 26 கோடி ரூபாயை உடனே வழங்க வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள ஆலை நவீனப்படுத்தும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பங்குதாரகளான விவசாயிகள் சிறிது நேரம் காதை பொத்தி, வாயை மூடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 14:03:19
Privacy-Data & cookie usage: