இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்று வந்த செல்வராஜ் ஆடு மேய்க்க சென்றுள்ளார். அங்கு வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த களைக்கொல்லி (விஷம்) மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் செல்வராஜை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குபதிவு செய்து மாணவன் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.