பெரம்பலூர் அருகே சித்த மருத்துவர் விஷம் குடித்து தற்கொலை!

schedule
2016-10-15 | 04:28h
update
2026-06-04 | 12:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Suicide by drinking poison at the Siddha doctor in near by Perambalur !

பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் ( 42) சித்த மருத்துவர் இவரது மனைவி பிரேமா இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகின்றன இவர்களுக்கு 2 பெண் குழந்தையும் 1 ஆண் குழந்தையும் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் குடிபழக்கம் உள்ள ஆறுமுகம் கடந்த 1 வார காலமாக அதிக அளவில் மது குடித்ததாக தெரிகிறது இதை மனைவி பிரேமா கண்டித்து உள்ளார். இதனால் மனம் உடைந்த ஆறுமுகம் நேற்று பெரம்பலூர் 4 ரோட்டில் உள்ள தனது சித்தா கிளினிக் சென்றவர் இரவு விடுதிரும்பவில்லை

இந்நிலையில் இன்று காலை செங்குணம் அருமடல் பிரிவு சாலையில் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. அருகில் பூச்சி மருந்து பாட்டிலும் கிடந்து உள்ளது.

இது குறித்து பிரேமா மருவத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் மருவத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.06.2026 - 12:46:33
Privacy-Data & cookie usage: