பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது: குளிர் காற்றால் ஓரளவு வெப்பம் தணிந்தது! மக்கள் மகிழ்ச்சி!!

schedule
2024-05-08 | 07:59h
update
2024-05-08 | 07:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Summer rains lashed various parts of Perambalur district: Cool air moderated the heat somewhat! People are happy!!

தென்னிந்திய பகுதிகளில், மேல் வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும், காற்று திசை மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இடி, மின்னல், காற்றுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Advertisement

இதன்படி தமிழகம், புதுவை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் தற்போது வரை ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகர், புறநகர் பகுதி உட்பட குன்னம், வேப்பூர், அந்தூர், ஓலைப்பாடி, நன்னை, வாலிகண்டபுரம், மங்களமேடு, சின்னாறு, ரஞ்சன்குடி, எசனை, அணுக்கூர், கோனேரி பாளையம், சோமண்டாபுதூர், மற்றும் நன்னை, கல்லை, ஓலைப்பாடி, பரவாய், அந்தூர், கல்லம்புதூர், குன்னம், ஆண்டிக்குரும்பலூர், வைத்தியநாதபுரம், உட்பட மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இன்று காலை மழை பெய்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 86 டிகிரி பாரன்ஹீட்டும் அதிகபட்சமாக 108 டிகிரியும் என கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், இன்று இன்று பல்வேறு பகுதிகளில் லேசான முதல் பலத்த மழை பெய்தது.

நள்ளிரவில் கூட வீடுகளில் வெப்பத்தால் புழுங்கிய மக்களுக்கு இன்று காலையில் மழையுடன் குளிர் காற்றும் வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் கால்நடை வளர்ப்பவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இன்னும் வரும் ஓரிரு நாட்கள் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால், அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயிலில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.08.2026 - 11:02:20
Privacy-Data & cookie usage: