வேப்பந்தட்டை மினி விளையாட்டரங்கத்தில் கோடை கால பயிற்சி முகாம்

schedule
2017-04-21 | 08:55h
update
2026-06-27 | 12:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

summer training camp at Veppantattai mini stadium

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. இராமசுப்பிரமணியராஜா விடுத்துள்ள தகவல் :

தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் மூலம் வேப்பந்தட்டையில் அமைந்துள்ள மினி விளையாட்டரங்கில் இருப்பிடமில்லா கோடை கால பயிற்சி முகாம் 21.04.2017 முதல் 05.05.2017 வரை 15 நாட்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

Advertisement

இப்பயிற்சி முகாமில் கால்பந்து, கையுந்துப்பந்து, கபடி, தடகளம் ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். பள்ளியில் படித்த மற்றும் படிக்காதவர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம். முகாம் காலை, மாலை இருவேளையும் நடைபெறும்.

இப்பயிற்சி முகாமில் சிறந்த பயிற்றுனர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ, மணாவியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஆகவே வேப்பந்தட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ;ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் உடற்திறனையும், விளையாட்டுத் திறனையும் மேம்படுத்தி பயனடையலாம். மேலும் தகவல்களுக்கு வேப்பந்தட்டை மினி விளையாட்டரங்க பாதுகாவலர் எம் செல்லப்பிள்ளை 9750050074 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 12:56:24
Privacy-Data & cookie usage: