வேப்பந்தட்டை மினி விளையாட்டரங்கத்தில் 15 நாட்களுக்கான கோடைக்கால பயிற்சிமுகாம் :ஆட்சியர்

schedule
2018-04-16 | 15:19h
update
2026-07-05 | 08:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Summer training for 15 days at Veppanthattai Mini Stadium: Collector notice

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் 2017-2018-ஆம் ஆண்டிற்கான வேப்பந்தட்டை மினி விளையாட்டரங்கத்தில் 15 நாட்களுக்கான கோடைக்கால பயிற்சிமுகாம் 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 20.04.2018 முதல் 04.05.2018 வரை காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

Advertisement

பயிற்சிமுகாம் தடகளம், கபாடி, கிரிக்கெட், கால்பந்து, கையுந்துபந்து, ஆகிய விளையாட்டுகளில் பயிற்றுநா;கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களைக்கொண்டு நடத்தப்பட உள்ளது. பயிற்சிமுகாமில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் மாணவரல்லாதோரும் பங்கேற்கலாம்.

பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ,மாணவியர்கள் 20.04.2018 அன்று காலை 6.30 மணிக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை மினி விளையாட்டரங்கத்திற்கு வருகை தருதல் அவசியம்.

பயிற்சி முகாமின் நிறைவில் சான்றிதழ்கள் வழங்கப்படும். முதலில் வரும் மாணவ,மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இப்பயிற்சிமுகாமில் வேப்பந்தட்டையில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும், விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தொலைபேசி எண். 8220999499, 9750050074, 7904276140 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 08:06:11
Privacy-Data & cookie usage: