அதிமுக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் ஆர்.டி.ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

schedule
2018-03-24 | 07:05h
update
2018-03-24 | 07:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Summer water pandhal on behalf of the AIADMK in Perambalur

பெரம்பலூரில் அதிமுக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் கோடை கால தொடங்கி உள்ள நிலையில் கடும் தண்ணீர் தாகத்தால் அவதிப்படும் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர் சிலை அருகே தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. அதனை பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்தினன் திறந்து வைத்தார். பின்னர், நீர், மோர், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி பழங்கள், இளநீர் போன்றவற்றை பொது மக்கள் தாகம் தணிக்கும் வகையில் வழங்கி தொடங்கி வைத்தார்.

Advertisement

பெரம்பலூர் எம்.எல்.ஏ. இரா.தமிழ்ச்செல்வன், மாவட்ட அவைத்தலைவர் நெய்க்குப்பை துரை, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் எம்.என். ராஜாராம், முன்னாள் எம்.எல்.ஏ பூவை.செழியன், இணைச் செயலாளர் ராணி, அண்ணா தொழிற்சங்க வீரபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் என்.கே. கர்ணன் (ஆலத்தூர்), என்.சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை) , மற்றும் மகளிர் அணியினர், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பெருமாள், கீழப்புலியூர் பத்ராசெல்வம், குன்னம் குணசீலன், மருவத்தூர் ஏ.செல்வராஜ், வழக்கறிஞர்கள் கணேசன், கதிர்.கனகராஜ், பெரம்பலூர் 1வது வார்டு செயலாளர் ஆர்.பி.கனகராஜன், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி உள்ளிட்ட பல அணி பொறுப்பாளர்கள்,மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தண்ணீர் பந்தலில், நீர், மோர், தொடர்ந்து பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 04:59:03
Privacy-Data & cookie usage: