Supply-related public redressal camp announcement – the Collector Info
மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் பெரம்பலூர் வட்டம், கல்பாடி கிராமத்தில் உதவி ஆணையர் (கலால்) மு.பாலகிருஷ்ணன் தலைமையிலும்,
வேப்பந்தட்டை வட்டம் வ.களத்தூர் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ப.கள்ளபிரான், தலைமையிலும்,
குன்னம் வட்டம் காருகுடி கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் (மற்றும்) பழங்குடியினர் நல அலுவலர் ஜெ.ராஜேந்திரன் தலைமையிலும்,
ஆலத்தூர் வட்டம், சில்லக்குடி கிராமத்தில் பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளர் ஆர்.கிருஷ்ணசாமி தலைமையிலும் வரும் 13.08.2016 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன் பெற வேண்டுமன
அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.