Suresh IAS academy group – 4 model examination 4 thousand wrote in Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குருப் 4 மற்றும் வி.ஏ.ஓ. எழுத்து தேர்வுக்கான மாதிரி எழுத்து தேர்வு துாத்துக்குடி சுரேஷ்அகாடமி சார்பில் நடந்தது. இதில் சுமார் 4 ஆயிரம் பேர் தேர்வு இன்று எழுதினர். தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தேர்வர்கள் மாதிரி தேர்வில் பங்கேற்கலாம்.

துாத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி பயிற்சி நிறுவனம் ஆண்டுதோறும் தங்களது பயிற்சி நிறுவனம் முலம் நுாற்றுகணக்கான நபர்களை அரசு தேர்வில் வெற்றிப்பெற செய்து பல்வேறு உயர் பதவிகளில் பணியில் உள்ளனர்.

ஆயிரகணக்கான அரசு ஊழியர்களை உருவாக்கிய சுரேஷ் அகாடமி நிறுவனம் தற்போது ராமநாதபுரத்தில் தனது கிளையை துவங்கி இங்கிருந்து நுாற்று கணக்கான நபர்களை அரசு தேர்வில் வெற்றி பெற செய்து தொடர் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடைபெற உள்ள தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குருப் 4 மற்றும் விஏஓ பணிக்கான தேர்வுக்கு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மாதிரி பயிற்சி தேர்வு நடத்தி தேர்வு எழுதுபவர்களுக்கு தேவையான முன்மாதிரி டிப்ஸ்களை வழங்கி வருகிறது. இந்த மாதிரி தேர்வில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலிருந்து சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்று மாதிரி தேர்வு எழுதி தங்களது திறமைகளை கண்டறிந்தனர்.

இதுகுறித்து சுரேஷ் அகாடமி நிறுவனர் சுகேஷ் சாமுவேல் தெரிவித்ததாவது:

எங்களது சுரேஷ் அகாடமியில் பயிலும் பயிலுனர்கள் பெரும்பாலும் அரசு தேர்வில் வெற்றி அடைந்து பல்வேறு இடங்களில் அரசு பணியில் உள்ளனர். நாங்கள் துாத்துக்குடியில் துவங்கிய பயிற்சி மையத்தை தற்போது சேவையாக பின்தங்கிய மாவட்டங்களில் தொடங்கி அங்குள்ள மக்களும் அரசு பணியில் சேர்வதற்கான முயற்சியில் இறங்கி உள்ளோம். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கள் கிளையை துவங்கினோம்.

இந்த மாவட்டத்தில் படித்த பட்டதாரிகள் பல ஆயிரம் பேர் இருந்தும் அரசு பணி கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இதை அறிந்து இங்கு கிளையை தொடங்கி ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பயிற்சி வழங்கியதின் விளைவு தற்போது இம்மாவட்டத்திலிருந்து ஏராளமானோர் அரசு பணிக்கு தேர்ச்சி பெற்ற பல்வேறு பணியில் அமர்ந்துள்ளனர்.

தற்போது தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் நடத்தும் குருப் 4 மற்றும் விஏஒ தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி சிவகங்கை மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் ஒரு சிறப்பு மாதிரி தேர்வு நடத்தினோம். இதில் ராமநாதபுரத்தில் 750 பேரும், பரமக்குடியில் 650 பேரும், சிவகங்கங்கையில் 558 பேரும் தேர்வு எழுதி தங்களது திறமையை அறிந்தனர். இத்தேர்வின் முலம் தேர்வு எழுதுபவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுகிறது.

தமிழக அளவில் பங்கேற்க வாய்ப்பு

பின்தங்கிய மாவட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் உள்ள மக்கள்பயன்பெறும் வகையில் மாதிரி தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன்படி வரும் 6ம் தேதி மற்றும் 8ம் தேதிகளில் மீண்டும் மாதிரி தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அரசு தேர்வில் கணிசமான நபர்களை சேர்ப்பதே எங்கள் லட்சியம். தேர்வில் பங்கு பெற மற்றும் மேலும் விபரங்கள் பெற (தமிழகத்தில் எந்த மாவட்டமாக இருந்தாலும்) 7550352916, 7550352917 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு சுகேஷ் சாமுவேல் தெரிவித்தார்.

செய்தி: சிவசங்கரன், ராமநாதபுரம்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!