தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக 2வது முறையாக பொறுப்பேற்று! பெரம்பலூருக்கு வருகை தரும், ஆ.இராசா

விற்கு வரவேற்பு: மாவட்ட செயலாளர் அழைப்பு!

schedule
2022-10-18 | 03:45h
update
2022-10-18 | 03:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Take charge as DMK Deputy General Secretary for the 2nd time! Welcome to A. Raja coming to Perambalur: District Secretary calls!

பெரம்பலூர் திமுக மாவட்ட செயலாளரும், ‌மாவட்ட ஊராட்சி குழுத் தலைவருமான குன்னம் சி இராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையில் நடந்த தி.மு.க. பொதுக் குழுவில், தலைவர் மு.க. ஸ்டாலினால், இரண்டாவது முறையாக ஆ.இராசா.எம்.பி., கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பிற்கு பிறகு பெரம்பலூர் மாவட்டத்திற்கு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து சேலம் மாவட்டம், ஆத்தூர் வழியாக இன்று காலை பெரம்பலூருக்கு வருகை தரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான ஆ.இராசா.எம்.பி.க்கு‌, பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் உள்ள கோனேரிப்பளையம், 4 வழிந சாலை சந்திப்பில் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

அங்கு வரவேற்பு நிகழ்ச்சி முடிந்தவுடன், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், அண்ணல் காந்தியடிகள் ஆகியோரது சிலைகளுக்கு ஆ.இராசா.எம்.பி., மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன் பிறகு பெரம்பலூர், அரியலூர் சாலையில் உள்ள பூமணம் திருமண மண்டபத்தில் நடைபெறும் பாராட்டு கூட்டத்தில் ஆ.இராசா.எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சிகளில், சட்டமன்ற உறுப்பினர், மாநில நிர்வாகிகள்,
மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய,நகர பேரூர் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மகளிர் அணியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள், கிளைக்கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும், என அதில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 04:12:56
Privacy-Data & cookie usage: