147.பெரம்பலூர் சட்டப் பேரவை தொகுதிக்கு உட்ப்பட்ட எளம்பலூர் உப்பு ஓடை அருகில் பறக்கும் படை அலுவலர் ச.பழனிசெல்வன் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையின் போது எளம்பலூர் இந்திராநகரை சேர்ந்த சத்தியசீலன் என்பவரால் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான ரொக்கம் இன்று பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரொக்கம் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.