Tamil Nadu Chief Minister J Jayalalithaa inaugurated the 6th time with the first the distributed on projects signed
தமிழக முதலமைச்சராக ஜெ ஜெயலலிதா 6-வது முறையாக பதவி ஏற்றவுடன் முதலில் கையொப்பமிட்ட திட்டங்கள் அடங்கிய விவர குறிபேடுகள் பெரம்பலூரில் வினியோகம்
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கிய 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்கள்.
எந்தெந்த திட்டங்களில் கையெழுத்திட்டார்கள் என்பதை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயார் செய்யப்பட்ட மடிப்பேடுகளை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்றது.
வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்தவேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக்கடன் மற்றும் நீண்ட காலக்கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்னும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 31.3.2016 வரை சிறு, குறு விவசாயிகளால் பெறப்பட்ட பயிர்க்கடன், நடுத்தரகாலக் கடன் மற்றும் நீண்டகாலக் கடன் ஆகிய அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிடும் கோப்பு, மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அதற்கான கோப்பு மற்றும்,
2011-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி இளநிலைப்பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக 50,000 ரூபாயும் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவியாக 25000 ரூபாய் நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி அனைத்து திருமண நிதி உதவி திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கென வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து ஒரு சவரன் அதாவது 8 கிராம் என உயர்த்தி வழங்கும் கோப்பு,
மேலும் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்கள் எனவும் விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரத்தை 750 யூனிட்டுகளாக உயர்த்தியும் வழங்கும் கோப்பு,
மதுவிலக்கு படிப்படியாக அமல் படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும் என்றும், அதனை நிறைவேற்றும் வகையில் முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும் என்றும், கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும், பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும் என்றும் குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் இலட்சியம் அடையப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா தெரிவித்திருந்தார்கள்.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் இதுவரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கிவரும் நிலையில் 24.5.2016 முதல் சில்லறை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் பார்கள் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என்ற உத்தரவு, மற்றும் 500 டாஸ்மாக் சில்லறை மதுபானக்கடைகள் மூடப்படும் என்ற உத்தரவு, உள்ளிட்ட ஐந்து கோப்புகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் கையொப்பமிட்டார்கள்.
மக்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி அதன் மூலம் மக்களுக்கு தாம் நன்றி செலுத்த உள்ளதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா தெரிவித்ததை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றவுடன் மேற்காணும் திட்டங்களை செயல்படுத்த ஆணையிட்டு அதற்கான கோப்புகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் கையொப்பமிட்டார்கள்.
அத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வு ஏற்ப்படுத்திடும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலமாக மடிப்பேடுகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர; திரு.ஆர;.டி.ராமசந்திரன் மற்றும் பெரம்பலூர; சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன் ஆகியோர் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலமாக தயார் செய்யப்பட்ட மடிப்பேடுகளை பொதுமக்களிடம் வழங்கினர்.
இந் நிகழ்ச்சிசியில் முன்னாள் துணை சபாநாயகர் அருணாசலம், பெரம்பலூர் நகராட்சி தலைவர் சி.ரமேஷ், ஒன்றியக் குழுத் தலைவர்கள் ஜெயக்குமார் (பெரம்பலூர்), கிருஷ்ணக்குமார் (வேப்பூ), ஜெயலெட்சுமிகனகராஜ் (வேப்பந்தட்டை), வெண்ணிலாராஜா (ஆலத்தூர்), பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க இயக்குநர் என்.கே. கர்ணன், கூட்டுறவு சங்க மொத்த விற்பனையாளர் சங்கத் தலைவர் ராஜேஸ்வரி, கவுள்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வகுமார் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.