“தமிழ்நாடு நாள் விழா” பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் : பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு!

schedule
2022-07-04 | 17:47h
update
2022-07-04 | 17:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

“Tamil Nadu Day Celebration” Essay and Speech Competitions for School, College Students : Perambalur Collector Announcement!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள அறிவிப்பு:

தமிழ்நாடு முதலமைச்சரால் தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளினையே “தமிழ்நாடு நாள் விழா” இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. 18.07.2022 தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 09.07.2022 சனிக்கிழமை அன்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

Advertisement

இப்போட்டிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு இரண்டு மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

போட்டிக்கான தலைப்புகள் : 1.தமிழ்நாடு உருவான வரலாறு, 2.மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், 3.தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள், 4.பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, 5.சங்கரலிங்கனாரின் உயிர் தியாகம், 6.மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார்,
7.மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா,பொ,சி, 8.சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, 9.எல்லைபோர்த் தியாகிகள், 10.முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு

இப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10,000/–, இரண்டாம் பரிசு ரூ.7,000/–, மற்றும் மூன்றாம் பரிசு ரூ.5,000/– என்ற வகையில் வழங்கப்பட உள்ளது. போட்டிகள் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் வெளியிடப்படும் என்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 01:12:12
Privacy-Data & cookie usage: