Tamil Nadu Electrical Workers Central Organization Request to Set Up Toilets in Board Residences in Sub-Station Complex!

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின், பெரம்பலூர் வட்டச் செயலாளர் சார்பில், வட்டத் தலைவர் எஸ்.அகஸ்டின் சார்பில், பெரம்பலூர் மேற்பார்வையாளருக்கு கொடுக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:

டிப்ளமோ படித்தவர்களுக்கு, பயிற்சியாளர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அவ்வுத்தரவில் தொகை ரூ.3,542/- குறிப்பிடப்பட்டுள்ளதால் ரூ.3,542/- மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே உயர்த்தி வழங்கப்பட்ட உதவி தொகையை நிலுவை தொகையுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு பயிற்சியாளர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டு 22.07.2021முதல் பணிபுரிந்து வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு உதவி தொகை வழங்கப்படவில்லை. தாமதமாக கணிணியில் பதிவேற்றம் செய்ததற்காக பணியேற்பு செய்த காலத்தை இரண்டு மாதங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமலும், உதவி தொகை வழங்காமல் இருப்பது நியாயமானது அல்ல மற்றும் உதவி தொகையிலிருந்து பிடித்தம் செய்வதை தவிர்த்து, பணியேற்பு செய்த தேதியை பயிற்சி காலமாக எடுத்துக்கொண்டு உதவி தொகை வழங்க நடவடிக்கை என்றும்,

மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு பராமரிப்பு பிரிவுக்கு ஓய்வறை மற்றும் இதர பணி சூழல் வசதி இல்லை. உதவி மின் பொறியாளர் / சிறப்பு பராமரிப்பு அலுவலக அறை மற்றும் உபகரணங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கு இடம் / அறை இல்லை. வாகனம் நிறுத்துமிடம் இல்லை. மழை நீர் கசிவு ஏற்படுகிறது. எனவே உரிய வசதிகளை அமைத்து தர நடவடிக்கை எடுக்கவும், மத்திய பண்டக சாலையில் அனைத்து அறைகளுக்கும் பால் சீலிங் வசதி அமைக்கவும்,

அரியலூர் துணை மின் வளாகத்தில் உள்ள வாரிய குடியிறுப்புகளில் அரியலூர் உபகோட்ட அலுவலகம், வடக்கு & கிராமியம் பிரிவு அலுவலகங்கள் 10 ஆண்டுகள் மேலாக இயங்கி வருகின்றது. மழையினால் மழை நீர் கசிவு ஏற்ப்பட்ட அலுவலக பதிவேடுகள் பாதிப்பு ஏற்படுகின்றன. குறிப்பாக கழிவறை இல்லாததால் ஊழியர்கள் / பொறியாளர்கள் பெரிதும் உடல் நிலை பாதிக்கப்படுகின்றனர். திறந்த வெளியில் சிறுநீர் கழிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. 15-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணிபுரிவதால் பெண்களுக்கு தனியாக கழிவறை வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் வருவாய் பிரிவுக்கும் குடிநீர் வசதி போதுமான கழிவறை வசதி இல்லாததால் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைதான் உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து பொது சுகாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காலநிலை பேச்சுவார்த்தைக்கு நாள் ஒதுக்கீடு வழங்குமாறு கேட்டு கோரிக்கை மனு கொடுக்ப்பட்டது. அப்போது, திரளான பொறுப்பாளர்கள், உறுப்பினர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!