Tamil Nadu Electricity Minister S.S. Sivashankar calls for starting new businesses and investing in the unconventional energy sector at the International Energy Conference!
டெல்லியில், இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மற்றும் ஒன்றிய அமைச்சகங்கள் இணைந்து நடத்திய 6-வது சர்வதேச எரிசக்தி மாநாடு ‘Beyond Boundaries: Creating New Power Markets’ என்ற தலைப்பிலான சிறப்பு அமைச்சர்கள் அமர்வு நேற்று நடந்தது. அதில், கலந்து கொண்ட தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தமிழ்நாட்டில் மரபுசாரா எரிசக்தியில், குறிப்பாக காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்னுற்பத்தியில் அடைந்துள்ள வளர்ச்சியை விளக்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொடர் நடவடிக்கைகளால், தமிழ்நாடு தொழில்மயமாகி வருவதையும், மரபுசாரா எரிசக்தித் துறையில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளதையும் எடுத்துரைத்தார். இத்துறையில் புதிய தொழில்களைத் தொடங்கவும், மூலதனம் செய்யவும் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த அமர்வில், இலங்கை எரிசக்தி துறை அமைச்சர் குமார ஜெயக்கொடி, சி.ஐ.ஐ. முன்னாள் தலைவர் சஞ்சீவ் பூரி உள்ளிட்ட பன்னாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.