Tamil Nadu Farmers’ Association has petitioned the Perambalur Collector to abandon the online registration system for electricity connection and demand direct registration system!

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.நீலகண்டன், தலைமையில், பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியாவிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

புதிதாக விவசாய மின் இணைப்பு, கோரி விவசாயிகள் 1-7-2022 முதல் மின் இணைப்பு பெற ஆன்லைன் மூலமே, பதிவு செய்திட வேண்டும்என அறிவிக்கப்பட்டு, பதிவு நடைபெற்று வருகிறது.

ஆன்லைன் பதிவுமுறை பற்றி முறையான விளக்கம் இதுவரை மின்வாரியத்தால், விவசாயிகளுக்கு வழங்கப்படாததால், பதிவு செய்வதில் விவசாயிகளுக்கு குழப்பம், ஏற்படுகிறது. 

தமிழகத்தின் முதல் 10 இடங்களில் உணவு உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் உள்ளது. பெரும்பான்மையாக நிலத்தடி நீர்மட்டத்தையே நம்பி உள்ளது. தமிழகத்தில் முதலிடம் பெறும் வகையில், மின்அணைப்பு கிடைக்க ஆன்லைன் பதிவு முறையினை கைவிட்டு, நேரடி பதிவு முறையினை தொடர்ந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கோரியுள்ளார்.

 


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!