தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாட்டு கொடி பயண பிரச்சாரம் : பெரம்பலூர் மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு

schedule
2017-08-25 | 17:55h
update
2026-07-03 | 11:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Tamil Nadu Farmers Association State Convention Flag Campaign: Welcome to Perambalur district

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாட்டு கொடி பயண பிரச்சாரம் : பெரம்பலூர் மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாடு ஆகஸ்ட் 27 முதல் தொடங்கி 29 வரை மூன்று நாட்கள் தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெறுவதை முன்னிட்டு ஆக. 24 அன்று மாலை 5மணிக்கு வந்த கொடி பயண பிரச்சாரத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

முதலாவதாக வேப்பந்தட்டை வட்டம் சின்னாறு வந்த பிரச்சார குழுவிற்கு வேப்பூர் ஒன்றியக்குழு மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் வாலிகண்டபுரத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டது. பின்னர், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை, மாவட்ட தலைவர் ஏ.கே.ராஜேந்திரன், பொருளாளர் அன்பழகன் மற்றும் ஆர்.சாமிதுரை, எ.சின்னக்கண்ணு, டி.எஸ்.சக்திவேல், வி.பொண்ணுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தோழமை கட்சி நிர்வாகிகள் திராவிடர் கழகம் தங்கராசு, பெரியார் திராவிடர் கழகம் தாமோதரன் , சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.அழக◌ாசாமி தீண்டாமை ஒழிப்பு முண்ணனி எம்.கருணாநிதி, முஸ்லீம் முன்னேற்ற கழகம் குதரத்துல்லா, தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தர், பகுஜன் சமாஜ்கட்சி ப.காமராசு, மருத்துவர் கழகம் டாக்டர் சி.கருணாகரன், மாற்றுத் திறனாளிகள் சங்கம் பி.கிருஷ்ணசாமி, ஓய்வூதியர் சங்கம் முருகேசன், சாலையோர வியாபாரிகள் சங்கம் பி.ரெங்கராஜ், மின் ஊழியர் சங்கம் அகஸ்டின், சிபிஎம் வட்ட செயலாளர் ராஜாங்கம் உள்பட ஏராளமானோர் வாழ்த்துரை வழங்கினர்,.

இன்று காலை பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் இரூரில் பிரச்சாரம் தொடங்கியது. ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். பிரச்சார குழுவை சேர்ந்த சீனீவாசன் விவசாயிகளின் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். பின்னர் பிரச்சாரக்குழு திருச்சியை நோக்கி சென்றது.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 11:44:55
Privacy-Data & cookie usage: