தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் விருது; பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2022-12-01 | 06:23h
update
2022-12-01 | 06:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com
Tamil Nadu Government Dr. Ambedkar Award; Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ஆதிதிராவிடர் நலத்துறையில் 2022-2023-ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் பெயரில், பட்டியலின முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் ” டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது“ 2023 – ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருவள்ளுவர் திருநாள் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. எனவே, பட்டியலின முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு புரிந்து தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்களில் தகுதியான நபர்கள் இருப்பின் 12.12.2022 – ற்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், பெரம்பலூர் – 621 212 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு தெரிவிவத்துள்ளார்.
Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 10:36:50
Privacy-Data & cookie usage: