தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் வழங்கி தொடங்கி வைத்தார்!

schedule
2024-01-10 | 08:39h
update
2024-01-10 | 08:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Tamil Nadu Government’s Pongal Prize Collection was inaugurated by the Collector in Perambalur by presenting Karpagam!

தமிழக அரசு கடந்த ஆண்டுகாளக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. அந்தத் தொகுபபில் ரொக்கம் ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு கிலோ பச்சை அரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு வழங்கி வருகிறது. அதன் தொடக்க விழா பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரையில் கலெக்டர் கற்பகம் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

Advertisement

எம் எல் ஏ பிரபாகரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் என்.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் குன்னம் சி. ராஜேந்திரன், பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், துரை. காமராஜ் உள்ளிட்ட கவுன்சிலர்கள், உடையார் டீ ஸ்டால் குமார், வருவாய் கூட்டுறவு துறை பணியாளர்கள் கலர் கலந்து கொண்டனர்.

கலெக்டர் காலதாமதமாக வந்ததால் பொதுமக்கள் ஒரு மணி நேரம் வேறு வேலைகளுக்கு செல்ல முடியாமல் காத்துக் கிடந்தனர். இதனால் அதிருப்தி அடைந்தனர். முன்னதாக கூட்டுறவு பதிவாளர் பாண்டியன் வரவேற்றார், எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். துணைப் பதிவாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.08.2026 - 10:10:59
Privacy-Data & cookie usage: