தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்!

schedule
2018-06-08 | 15:01h
update
2026-04-28 | 10:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Tamil Nadu Teacher Progress Association Demonstrated in Namakkal

நாமக்கல்லில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

நாமக்கல் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் அத்தியப்பன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் செந்தில்ராஜா வரவேற்றார்.

இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். கிராமப்புற மேல்நிலைப் பள்ளிகளில் 15-க்கும் குறைவாக மாணவர்கள் இருக்கும் பாடப் பிரிவினை மூடுவதை கைவிட வேண்டும். 2004-06 ம் ஆண்டு வரை ஒழுங்கு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, அவர்கள் பணி அமர்த்தப்பட்ட நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் தண்டாயுதபாணி, ஒருங்கிணைப் பாளர் முத்து வரதப்பன், செய்தி தொடர்பாளர் முத்துக்குமார், பொருளாளர் தினேஷ், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், அமைப்புச் செயலாளர்ர் கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். முடிவில் மாவட்ட ஆலோசகர் மதியழகன் நன்றி கூறினார்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.04.2026 - 10:41:06
Privacy-Data & cookie usage: