Tamil Nadu Chief Minister Edapadi K.Palanisami to visit Perambalur tomorrow: AIADMK to give special welcome: RT Ramachandran

File Copy

பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டிஇராமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை (17ம்தேதி) வருகிறார். இதையொட்டி மாவட்ட அதிமுக சார்பில் முதல்வருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நாளை (17ம்தேதி) மாலை 3மணியளவில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி பணிகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.

பின்னர் விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில்முனைவோர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.24.41 கோடி மதிப்பிலான 8 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், ரூ.19.25 கோடி மதிப்பிலான 4 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.23.58 கோடி மதிப்பில் ஆயிரத்து 614 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், பேசுகிறார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தரும் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு காலையில் சேலம் மாவட்டத்தில் இருந்து பெரம்பலூருக்கு வருகை தரும் போது கிருஷ்ணாபுரத்திலும், அரியலூர் நிகழ்ச்சியை முடித்து விட்டு, மாலையில் பெரம்பலூர் வருகை தரும் போது மாவட்ட எல்லையான அல்லிநகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால், வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்கவேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!