பெரம்பலூரில் நாராயணசாமி நாயுடு சிலைக்கு தமிழக விவசாய சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை!

schedule
2021-12-22 | 09:30h
update
2021-12-22 | 09:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Tamilga Vivasaigal Sangam to Narayanasamy Naidu statue in Perambalur

மறைந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுவின் 37வது நினைவு நாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரின் உருவச்சிலைக்கு, தமிழக விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்ட செயலாளர் வி.நீலகண்டன் மாலை அணிவித்தார். இக்கூட்டத்தில் தலைமை வகித்து கலந்து கொண்ட தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதன் பின்பு தமிழக விவசாயிகள் சங்க கொடி ஏற்றப்பட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. திருச்சி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்க (பால் உற்பத்தியாளர்கள்) தலைவர் கணேசன், மற்றும் வேப்பந்தட்டை வட்டார தலைவர் எம்.எஸ். ராஜேந்திரன், வேப்பூர் வட்டார செயலாளர் எஸ்.கே. செல்லகருப்பு, களரம்பட்டி துரைராஜ், சிறுகுடல் பி.ராமசாமி, எஸ’.செல்லப்பன், ராமையா,செல்லப்பிள்ளை,ரெங்கசாமி, தர்மராஜ் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.05.2026 - 13:24:53
Privacy-Data & cookie usage: