தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்களின் படைப்பிலக்கிய விமர்சன கூட்டம்.

schedule
2017-10-22 | 15:38h
update
2026-06-29 | 12:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Tamilnadu progressive writers and artists’ review meeting.

பெரம்பலூர் : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் படைப்பிலக்கிய விமர்சன கூட்டம் நேற்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரெட்டியார்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

Advertisement

அற்றைத்திங்கள் நாவல் குறித்து மாவட்ட பொருளாளர் க.மூர்த்தி, அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது கவிதை நூல் குறித்து இணைச் செயலாளர் அ.சுரேஷ்குமார், மற்றும் செம்மொழி செதுக்கிய சிற்பிகள் கட்டுரை நூல் குறித்து மு.முத்துக்குமாரன் ஆகியோர் விமர்சன உரையாற்றினார்கள்.

எழுத்தாளர் பி.தயாளன், கவிஞர் மவுனன் யாத்ரீகா, எழுத்தாளர் கலைச்செல்வி ஆகியோர் உரையாற்றினர்.

சிறுகதை எழுத்தாளர் புலியூர் முருகேசன் வாழ்த்துரை வழங்கினார். வே.செந்தில்குமரன், க.சுகன்யா, ஆ.நல்லன், க.தினேஷ்பாபு, கலைஓவியன், ப.ஐஸ்வர்யா, கற்பணைப்பித்தன், நெ.சரளா ஆகியோர் கவிதை வாசித்தனர். தா.அன்புச்செல்வன் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.06.2026 - 12:40:51
Privacy-Data & cookie usage: