கடலூர் அருகே பெண் ஆசிரியர் பள்ளியில் கொடூரமாக வெட்டிக்கொலை!

schedule
2019-02-22 | 13:12h
update
2019-02-22 | 13:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Tamilnadu: Women Teacher Murdered in School near in Cuddalore

கடலூர் மாவட்டம், குறிச்சிப்பாடி சின்ன கடைவீதி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் ரம்யா (வயது 23). இவர் அருகில் உள்ள காயத்ரி மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இன்று வழக்கம் போல் பள்ளிக்கு காலை 8.30 மணிக்கு பணிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த சிலர், திட்டமிட்டப்படி பள்ளிக்குள் நுழைந்து பெண் ஆசிரியர் ரம்யாவை மறைத்து வைத்திருந்த கத்தியால் சராமாரியாக வெட்டினர். கழுத்தில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த பள்ளிப் பணியாளர் பள்ளி நிர்வாகி ரங்கராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். கொலையாளி தான் வந்த இரு சக்கரவாகனத்தில் தப்பி தலைமறைவானர். இது குறித்து தகவல் அறிந்த குறிச்சிப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தலைதுண்டான ரம்யாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக குறிச்சிப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனிப்படை அமைத்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விருதகிரி குப்பத்தை சேர்ந்த ராஜசேகர் (வயது 24) என தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளளது.

Advertisement

Tags: Cuddalore
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.03.2026 - 16:32:45
Privacy-Data & cookie usage: