பெரம்பலூரில் டீ கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை!

schedule
2021-10-12 | 08:17h
update
2021-10-12 | 08:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Tea shop Owner commits suicide in Perambalur

பெரம்பலூரில் டீக்கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் அருகே உள்ள மரவத்தம் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் செல்வராஜ் ( 55). இவர், பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சாலையில் இருந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலைய பகுதியில் உள்ள உறவினரா செல்வம் என்பவரது கட்டிடத்தில் டீ கடை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சுமார் 15 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து விவாகரத்து கொடுத்து விட்டு தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு அப்பா மற்றும் அண்ணன், 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மகனுக்கு திருமணம் செய்வதில் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனஉளைச்சலில் இருந்த செல்வராஜ், தனிமையில் இருந்து வந்துள்ளார்.

Advertisement

இன்று காலை வழக்கமாக டீ குடிக்க வரும் வாடிக்கையாளர்கள் கடையில் வந்து பார்த்த போது பாதி கடை திறந்தும், மீதி திறக்காமலும் இருந்தது கண்டு, அதிர்ச்சி அடைந்து, பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து, வந்து, உடலை கைப்பற்றிய, போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது, தந்தை அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், டீக்கடைக்காரர் செல்வராஜ் இறப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 11:11:50
Privacy-Data & cookie usage: