Teacher Eligibility Test: Second Paper: 8816 persons Written

schedule
2017-04-30 | 17:31h
update
2026-06-27 | 21:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Teacher Eligibility Test: Second Paper: 8816 persons Written : ஆசிரியர் தகுதித் தேர்வு : இரண்டாம் தாள் : 8816 பேர்கள் எழுதினர்

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 23 மையங்களில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளுக்கான தேர்விற்கு 9,091 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் இன்று 8816 நபர்கள் தேர்வெழுதினர்.

Advertisement

இரண்டாம் தாளுக்கான தேர்வுப்பணிகளில் 23 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 23 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 23 துறை அலுவலர்கள் மற்றும் 26 கூடுதல் துறை அலுவலர்களும், 478 அறை கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக தேர்வு மையங்களுக்கு சென்று வர பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

மேலும் ஒவ்வொரு மையத்திலும் உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவர் மற்றும் செவிலியர் கொண்ட மருத்துவ குழு மற்றும் தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் தயார் நிலையில் இருந்து பாது காப்புபணிகளை மேற்கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 21:26:34
Privacy-Data & cookie usage: