2017-18ஆம் ஆண்டிற்கான ஆசிரியர்கள் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு

schedule
2017-05-17 | 17:11h
update
2026-06-25 | 17:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அருள்மொழிதேவி விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் 19.05.2017 வெள்ளிக்கிழமை அன்று அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம்; மாறுதலுக்கான கலந்தாய்வும்,

20.05.2017 சனிக்கிழமை முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவியிலிருந்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்விற்கான கலந்தாய்வும்,

Advertisement

22.05.2017 திங்கட்கிழமை அன்று அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம், மாறுதலுக்கான கலந்தாய்வும்,
23.05.2017 செவ்வாய் கிழமை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்விற்கான கலந்தாய்வுகளும் நடைபெற உள்ளன. இக்கலந்தாய்வுகள் பெரம்பலுhh; முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

24.05.2017 புதனன்று முதுகலை, கணினி, வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர்கள்- மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான கலந்தாய்வும்,

25.05.2017 வியாழன் அன்று முதுகலை, கணினி, வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வும்,

27.05.2017 சனியன்று பட்டதாரிஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்விற்கான கலந்தாய்வும்,

28.05.2017 ஞாயிறன்று இநிஆ – உடற்கல்வி, தையல், ஓவியம், இசை சிறப்பாசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்; மாறுதலுக்கான கலந்தாய்வும்,

29.05.2017 திங்கட்கிழமை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான கலந்தாய்வும்,

30.05.2017 செவ்வாய் பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்

31.05.2017 புதனன்று இநிஆ. உடற்கல்வி, தையல், ஓவியம், இசை சிறப்பாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்விற்கான கலந்தாய்வுகள் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். மேலும் கலந்தாய்வுகள் காலை 9.00 மணி முதல் துவங்கி நடைபெறும்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 17:55:20
Privacy-Data & cookie usage: