பெரம்பலூர் அருகே அரசு கல்லூரி விழாவில் விளம்பர பதாகை கிழிப்பு

schedule
2017-08-21 | 20:00h
update
2026-07-04 | 12:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Tear advertising banner at the peravai ceremony at the Government College in vepanthattai at perambalur dt

பெரம்பலூர் மாவட்டம் அருகே அரசு கலைக் கல்லூரியில் அ.தி.மு.க வினர் வைத்த விளம்பர பதாகையை அ.தி.மு.க வினரே கிளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ, தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு கல்லூரி பேரவையை தொடங்கி வைத்தார்.

முன்னதாக, தமிழ்செல்வன் எம்.எல்.ஏ,வை வரவேற்று அ.தி.மு.க வினர் விளம்பர பதாகை வைத்திருந்தனர். அதில் பெரம்பலூர் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ பெயர் இடம்பெறவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் சிலர் கல்லூரி வளாகத்துக்கு வந்து ராமச்சந்திரன் எம்.எல்.ஏ பெயர் இடம்பெறாத விளம்பர பதாகைகளை அங்கிருந்து முற்றிலுமாக அகற்றினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் விளம்பர பதாகைகள் வைத்தவர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்காததால் அங்கு பிரச்சணை ஏதும் எழவில்லை.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 12:55:29
Privacy-Data & cookie usage: