Technical problem on Coimbatore – Pollachi railway line; Passengers suffer!

கோவை – பொள்ளாச்சி ரயில் பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் தாமதமானதால் பயணிகள் அவதியுற்றனர்.

கோவை – பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் ரயில்களில் நாள்தோறும் 1000 கும் மேற்பட்ட பயணியர்கள் பயணம் செய்து வருகின்றனர். இன்று காலை கோவையில் இருந்து காலை 5:20 மணிக்கு இயக்கப்பட்ட ரயில் கிணத்துக்கடவு ரயில் நிலையத்திற்கு காலை 5:55 மணிக்கு வந்து நின்றது. பின்னர் ரயில் ஓடுபாதையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு (டிராக் டிரைவ்) காரணமாக 7:34 மணிக்கு கிளம்பி 8:00 மணிக்கு பொள்ளாச்சி சென்றடைந்தது. ரயில் தாமதத்தால் பொள்ளாச்சியில் ரயில் நிலையத்திலிருந்து காலை 7:20 மணிக்கு இயக்கப்பட இருந்த ரயில் 8:45 மணிக்கு இயக்கப்பட்டு 9:45 மணிக்கு கோவைக்கு சென்றது. இதனால் வழக்கமாக பணிக்கு செல்லும் ரயில் பயணியர்கள் பாதிக்கப்பட்டனர். வழக்கமாக பணிக்கு செல்வோர், கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதியுற்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!