பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, வயலுக்கு காவல் சென்ற வாலிபர் பலி!

schedule
2022-09-25 | 17:12h
update
2022-09-25 | 17:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Teenager dies after being hit by an unidentified vehicle near Perambalur!

பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே உள்ள ஒட்டர் தெருவை சேர்ந்தவர் குமார் மகன் நீலகண்டன் (26 ). இவரது சகோதரருக்கு சொந்தமாக அம்மாபாளையத்தில் விவசாய தோட்டத்தை பராமரித்து வந்தார். இரவு நேரத்தில் பாதுகாப்பிற்காக சென்று வந்துள்ளார் நேற்றிரவும், பைக்கில் அம்மாபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார் . அப்போது குரும்பலூரில் உள்ள அரசு கல்லூரி அருகே சென்ற போது, எதிரே வந்த, அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. விபத்தில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நீலகண்டனின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்தி சென்ற வாகனத்தை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 22:50:52
Privacy-Data & cookie usage: