பெரம்பலூர் அருகே தங்க செயினை தர மறுத்த வாலிபருக்கு கத்தி குத்து: மர்ம கும்பல் அட்டூழியம்!

schedule
2022-02-20 | 07:12h
update
2022-02-20 | 07:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Teenager stabbed to Wound for refusing gold chain near Perambalur: Mysterious gang atrocity!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சித்தளி கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் பிரபாகரன் (28). பெரம்பலூரில் மஹேந்திரா டிராக்டர் கம்பனியில் வேலை செய்து வருகிறார்.

நேற்றிரவு சுமார் 8 மணி அளவில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு பெரம்பலூர் – அரியலூர் சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.

Advertisement

சித்தளி வனத்துறை அலுவலகம் அருகே மோட்டர் சைக்கிளை நிறுத்தி சிறுநீர் கழித்து கொண்டிருந்தார். அப்போது, மின்னல் வேகத்தில் மோட்டர் சைக்களில் வந்த மூன்று பேர் பிரபாகரன் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.

இதனை வாலிபர் தடுத்ததால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் இடுப்பின் வலது பகுதி, வலது பின்பக்க தோள்பகுதி, இடது உள்ளங்கை ஆகிய இடங்களில் கத்தில் குத்தினர். அவ்வழியே வாகனங்கள் வருவதை கண்டவுடன் தங்க செயினை விட்டு தப்பி மறைந்தனர்.

காயமடைந்த வாலிபரை வழிபோக்கர்கள் போலீசாருக்கும், உறவினர்களுக்கும், தகவல் தெரிவித்தனர். பின்னர், காயமடைந்த வாலிபரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தீவிர தேடி வருகின்றனர். இரவு – பகல் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் பெரம்பலூர் -அரியலூர் சாலையில் நடந்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 14:19:52
Privacy-Data & cookie usage: