பெரம்பலூரில் லஞ்சம் வாங்கிய, கோவில் பணியாளர் கைது!

schedule
2023-03-29 | 17:51h
update
2023-03-29 | 17:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Temple employee arrested for bribery in Perambalur!

Advertisement

பெரம்பலூர் மதனகோபாலசாமி கோவில் எழுத்தர் லஞ்சம் பெற்ற போது லஞ்ச ஒழிப்புத் துறை போலிசாரால் கைது செய்யப்பட்டார்.சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி (58), மதனகோபாலசாமி கோவில் எழுத்தராக உள்ளார். பெரம்பலூர் காந்தி நகரை சேர்ந்த குப்புசாமி மகன் சிங்காரம் (45), பெரம்பலூர் தெப்பக்குளம் அருகே மதனகோபாலசாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சலூன் கடை நடத்தி வருகிறார். அதனை புதுப்பிப்பதற்காக சென்ற அதற்கு, ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். கொடுக்க விரும்பாத சிங்காரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் அளித்தார். பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி ஹேமசித்ரா தலைமையிலாக போலீசார், ரசாயனம் தடவிய நோட்டுக்களை சிங்காரத்திடம் கொடுத்து விட்டு, மறைந்திருந்தனர். அதனை ரவி வாங்கிய போது கையும் களவுமாக பிடித்து கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.08.2026 - 05:14:00
Privacy-Data & cookie usage: