பெரம்பலூர் அருகே கோயில் பூட்டை உடைத்து உண்டியல், வேல் திருட்டு; போலீசார் விசாரணை!

schedule
2026-05-31 | 16:27h
update
2026-05-31 | 16:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Temple Lock Broken, Hundi and Vel Stolen Near Perambalur; Police Investigate!

பெரம்பலூர் அருகே எளம்பலூரில் ஓம் ஸ்ரீ மஹா வராகி அம்மன் கோயில் உள்ளது. நேற்றிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த சுமார் ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு அடி உயரம் கொண்ட பித்தளை வேல் ஆகியவற்றை திருடிசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

பெரம்பலூர் அருகே எறையசமுத்திரத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி சோபனா (42). இவருக்கு சொந்தமான நிலம் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எளம்பலூர் செங்குணம் பிரவு சாலை எதிர்புறம் உள்ளது. இதில் 4 சென்ட் நிலத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓம் ஸ்ரீ மஹா வராகி அம்மன் கோயில் கட்டி நிர்வகித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு சுமார் 8.30 மணிக்கு கோயில் பூசாரி கோயிலை பூட்டிவிட்டு சென்று விட்டு, இன்று காலை சுமார் 7 மணியளவில் வந்து பார்த்தபோது கோயிலின் சிசிடிவி கேமரா மற்றும் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் உண்டியலில் இருந்த சுமார் ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு அடி உயரம் கொண்ட பித்தளை வேல் ஆகியவற்றை திருடிசென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.05.2026 - 16:56:21
Privacy-Data & cookie usage: