பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வு : நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

schedule
2017-05-30 | 17:19h
update
2026-09-23 | 17:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Tenth Class Special Supplementary Examination: You can apply for tomorrow

பெரம்பலூர் : நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு மார்ச் 2017 பொதுத் தேர்வில் தோல்வியுற்றவர்கள், வருகைபுரியாதவர்களுக்காக வருகிற 28.06.2017 அன்று தொடங்கி 06.07.2017 வரை நடைபெறவிருக்கும் ஜுன், ஜுலை 2017 பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அவரவர் பயின்ற பள்ளிகள், தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க இயலும்.

விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று 31.05.2017 (புதன் கிழமை) முதல் 03.06.2017 (சனிக்கிழமை) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் இணைய தள சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது.

தேர்வு கட்டணம் செலுத்தும் முறை : தேர்வுக் கட்டணம் ரூ.125- மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ.50- சேர்த்து மொத்தம் ரூ.175- ஐ ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் பள்ளிகள், தேர்வு மையங்களிலேயே பணமாக மட்டுமே செலுத்த வேண்டும் .

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் விநியோகம் :

தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் அறிந்துகொள்ளலாம்.

தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.09.2026 - 17:38:42
Privacy-Data & cookie usage: