சாகசம் புரிந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு டென்சிங் நார்கே தேசிய சாகச விருது ; பெரம்பலூர் கலெக்டர் வே. சாந்தா தகவல்

schedule
2020-06-29 | 13:02h
update
2020-06-29 | 13:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Tenzing Norgay National Adventure Award for Adventurer and Hero; Perambalur Collector V. Santa information


பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும், நாட்டிற்கு பெருமை தேடித் தரும் சாகசம் புரிந்த சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.

Advertisement

அதன்படி, இந்திய அரசின் சார்பில் 2019 ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற, விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்பும் உறையின் மீது 2019ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான (Tenzing Norgy National Adventure Award for the Year 2019) விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர். விளையாட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் 3 நகல்களுடன் 30.06.2020-க்குள் ஒப்படைத்திடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரையுடன் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116ஏ, பெரியார் ஈ.வே.ரா. நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை -84 என்ற முகவரியில் கிடைக்குமாறு அனுப்பப்படும், என குறிப்பிட்டுள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 14:01:01
Privacy-Data & cookie usage: