பெரம்பலூர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா: தொழில் முனைவோர்களுடன் ஆலோசனைக் கூட்டம் : கலெக்டர் தகவல்!

schedule
2023-12-14 | 16:24h
update
2023-12-14 | 16:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Textile park in Perambalur district: Consultation meeting with entrepreneurs : Collector info!

ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்த பட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்படவேண்டும்.

Advertisement

தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொது பயன்பாட்டிற்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.

தற்போது தொழில்முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் ஜவுளி தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைத்து நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும். மேலும், அதிகளவில் அந்நிய செலாவணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

எனவே, சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் வேலைவாய்ப்புகளை பெருக்கவும் அனைத்து தொழில் முனைவோரும் முன்வர வேண்டும்.

இது தொடர்பாக 30.11.2023 அன்று நடைபெறவிருந்த கூட்டம் நிர்வாக காரணத்தை முன்னிட்டு 20.12.2023 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குநர், மண்டல துணை இயக்குநர் அலுவலகம், துணிநூல்துறை, எண். 30/3, நவலடியான் வளாகம் முதல் தளம், தான்தோன்றிமலை, கரூர்- 639 005 (தொலைபேசி எண் : 04324- 299 544, +91-98432 12584) என்ற முகவரியினை தொடர்புகொள்ளலாம் என கலெக்டர் க.கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.08.2026 - 11:21:22
Privacy-Data & cookie usage: