சிறுவாச்சூரில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த அரசுக்கு நன்றி : பெரம்பலூர் விசிக

schedule
2017-07-23 | 17:04h
update
2026-05-02 | 05:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Thank you for the government allocated to set up a high level bridge in siruvachur: Perambalur VCK

பெரம்பலூர் : பெரம்பலூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழுக் கூட்டம், பெரம்பலூர் சங்கு அருகே உள்ள சமுதாயக் கூடத்தில் ஒன்றியச் செயலாளர் (கி) சி.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் (மே) எம்.பி. மனோகரன் வரவேற்றார். மாவட்ட செய்தித் தொடர்பாளர் மு.உதயகுமார் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

மாவட்டச் செயலாளர் சி.தமிழ்மாணிக்கம், வி.தொ.வி.இ மாநில செயலாளர் வீர.செங்கோலன், தொண்டரணி மாநிலத் துணைச் செயலாளர் கராத்தே.பெரியசாமி, மாநில வழக்கறிஞர் அணி இரா.சீனிவாசராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செயற்குழு கூட்டத்தில், கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் 55 வது பிறந்த நாளை அனைத்து ஊர்களிலும், கல்வெட்டுடன், கொடி ஏற்றி இனிப்பு வழங்கி, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது என்றும்,

தமிழக அரசு அறிவித்தப்படி அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு வழங்க வேண்டும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் ஏரி, குளம், ஓடை, குட்டைகளில உள்ள அக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,

பெரம்பலூர் மாவட்டம், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் உயர் மட்ட மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கிய தமிழக நன்றி அறிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தென்றல் தன்ராஜ் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2026 - 05:06:08
Privacy-Data & cookie usage: