Thanks to the Chief Minister of Tamil Nadu for announcing a separate financial status report for Agriculture: Tamil Nadu Agricultural Graduates Teachers Association

தமிழ்நாடு வேளாண்மைப் பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் அக்ரி மாதவன் மற்றும் நிர்வாகிகள் பொருளாளர் ராமன், தலைமை நிலையச் செயலாளர் அன்பரசன், ஒருங்கிணைப்பாளர்கள் வேலாயுதம், அல்லாபக்ஷா மற்றும் வேளாண் ஆசிரியர்கள் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பெரம்பலூர் எம்.எல்.ஏ. எம்.பிரபாகரனை முன்னிலையில், சந்தித்து சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர், அவர்கள் கொடுத்த கோரிக்க மனு விவரம்:

அரசு மேல் நிலைப் பள்ளிகளில் வேளாண்மை அறிவியல் கல்வியை பொதுக் கல்வித் திட்டத்தில் அறிமுகப்படுத்துதல், அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் வேளாண்மை அறிவியல் வகுப்பை உருவாக்க வேண்டும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயின்ற தொழில் நுட்ப பட்டதாரிகளை வேளாண்மை ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும், மேல்நிலை வேளாண்மை ஆசிரியர்களை தொழிற்கல்வி ஆசிரியர்கள் என்ற நிலையிலிருந்து முதுநிலை ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும், வேளாண்மை ஆசிரியர்களுக்கு அரசாணையை உறுதிப்படுத்தி ஊதியம் நிர்ணயம் செய்து ஊதியம் வழங்க வேண்டும், வேளாண் அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், , அரசு கல்லூரிகளில் மட்டும் வழங்கப்படும் 5 சதவிகித இடங்களிலிருந்து, பல்கலைக்கழக இணைவு பெற்ற தனியார் வேளாண்மை கல்லூரிகளிலும் வேளாண்மை அறிவியல் பயின்ற மாணவர்களை அனுமதித்து மொத்த இடங்களில் 10 சதவிகிதமாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் வேளாண்மை தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் உரிய பாடங்களை படித்திட அனுமதித்தல், மற்றும் வேளாண்மைக்கென்று தனி நிதி நிலை அறிக்கை அறிவித்து வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை உருவாக்கிய தமிழக முதலமைச்சருக்கு நன்றியும் தெரிவித்திருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!