தமிழக அரசுக்கு நன்றி; பெரம்பலூரில் நடந்த பத்திரம்- நகல் எழுதுவோர் சங்க மாநில சங்க கூட்டத்தில் தீர்மானம்!

schedule
2023-09-24 | 16:01h
update
2023-09-24 | 16:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Thanks to the Government of Tamil Nadu; Document Writers State Association Meeting held in Perambalur Resolution!

தமிழ்நாடு பத்திரம்-நகல் எழுதுவோர் சங்கத்தின் மாநில செயற்குழு & நிர்வாகக் குழு கூட்டம் பெரம்பலூரில், அச்சங்கத்தின் மாநில தலைவர் திருப்பூர் எஸ்.பத்மநாபன் தலைமையில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் மதுரை க.கண்ணன், மாநில பொருளாளர் ராமநாதபுரம் ஆர்.முத்துக்குமார் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். துறையூர் வி.கமலகண்ணன் வரவேற்றார். வேப்பூர் வி.தங்கராசு, வாலிகண்டபுரம் வி.ராமராஜ், செட்டிக்குளம் என்.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

கூட்டத்தில், ஆவண எழுத்தர்களின் வாழ்வாதற்த்திற்காக தமிழக அரசு, ஆவண எழுத்தர்கள் நல நிதியம் என்கிற அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு தமிழக அரசுக்கும், தமிழக முதலமைச்சருக்கும் மற்றும் துறை அமைச்சர், பதிவு துறை தலைவர், செயலாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நன்றி அறிவிப்பு கூட்டம், பாராட்டு விழா சென்னையில் நடத்துவது என்றும், மாநில பொதுக்குழு கூட்டம், கிருஷ்ணகிரியில் நடத்துவது என்றும், நலநிதியின் செயலாளர் பொறுப்பு மற்றும் நலநிதிய இயக்குநர்கள் கூடுதலாக 5 நபர்களை கோருதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தற்போது ஆவணம் எழுவதில் இருக்கும் பல்வேறு நடை முறை சிக்கல்களுக்கு, ஆலோசனைகளும், தீர்வுகளும் எடுத்துரைக்கப்பட்டது. பெரம்பலூர் ப.அப்துல்அலீம் நன்றி கூறினார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆவண எழுத்தர்கள், நகல் எழுதுவோர்களும் கலந்து கொண்டனர். தற்போது ஆவணம் எழுவதில் இருக்கும் பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு, ஆலோசனைகளும், தீர்வுகளும் எடுத்துரைக்கப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பத்திர எழுத்தர் பெரம்பலூர் காமராஜ் உள்பட பத்திரம்-நகல் எழுதுவோர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் ப.அப்துல்அலீம் நன்றி கூறினார்.

விளம்பரம்: https://dsmatrimony.net/

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.08.2026 - 11:46:57
Privacy-Data & cookie usage: