சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது; 5 லட்சம், தங்கப் பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்: பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2022-09-16 | 14:56h
update
2022-09-16 | 15:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Thanthai Periyar Award for Social Justice; 5 Lakhs, Apply for Gold Medal: Perambalur Collector Information!

Periyar

பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிக்கும் வகையில் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுபவருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்.

Advertisement

2022-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு, பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள், தங்களது விண்ணப்பம், தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்டு பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கிய தகுதிகள் உடையவர்கள் 2022 -ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று 31.10.2022- க்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.06.2026 - 02:33:00
Privacy-Data & cookie usage: