நாமக்கல்லில் தனியார் பள்ளி 10ம்வகுப்பு மாணவன் வகுப்பறையில் துாக்குமாட்டி தற்கொலை

schedule
2018-11-26 | 06:40h
update
2026-04-24 | 19:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The 10th-Class student of the private school in Namakkal committed suicide in the classroom

நாமக்கல்லில் தனியார் பள்ளி மாணவன் வகுப்பறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சி மாவட்டம், துறையூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் அகஸ்திய சன்மார்க்க சங்கம் என்ற பெயரில், ஆசிரமம் நடத்தி வருகிறார்.இவரது மகன் அம்பிகானந்தன் (15). அம்பிகானந்தன் நாமக்கல் மோ,கனூர் ரோ ட்டில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் விடுதியில் தங்கி 10 வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை 8:30 மணிக்கு தனது வகுப்பறைக்கு சென்ற அம்பிகானந்தன் கயிற்றை விட்டத்தில் மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

நீண்ட நேரமாகியும் மாணவர் விடுதிக்கு வராததால் சந்தேகம் அடைந்த விடுதி கண்காணிப்பாளர் குமாரசாமி அப்பகுதியில் தேடினார். அப்போது, மாணவர் அம்பிகானந்தன், தனது வகுப்பறையில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டநிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசாருக்கும், மாணவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற நாமக்கல் போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மாணவர் நன்றாக படிக்கவில்லை என்றும், அதனால், மனமுடைந்த தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இது குறிதது வழக்கு பதிந்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2026 - 19:00:32
Privacy-Data & cookie usage: