ஷேர் ஆட்டோ ஓட்டுனர் செல்போன் பேசிக் கொண்டே ஓட்டியதால் விபத்து : கல்லூரி ஊழியர் பலி

schedule
2017-11-09 | 08:12h
update
2026-07-04 | 05:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The accident occurred when the driving of the auto driver was talking down the cell phone

பெரம்பலூர் அருகே இன்று காலை ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் தனியார் கல்லூரி ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த கல்லூரியில் பணிபுரியும் ஊழியர் கோவிந்தராஜ் (வயது 52), என்பவர் கல்லூரியில் இருந்து எதிர்ப்புறத்தில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து கல்லூரிக்கு திரும்ப வந்து கொண்டிருந்தார். அப்போது சாலை சட்ட விதிகளுக்கு புறம்பாக சென்னை – திருச்சி செல்லும் வழியில் எதிர்த் திசையில் வந்த ஷேர் ஆட்டோ கோவிந்தராஜ் மீது வேகமாக வந்து மோதி உள்ளது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸில் கோவிந்தராஜை சிகிச்சைக்காக ஏற்றி செல்ல முற்பட்ட போது அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திமடைந்த அப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தி, செல்போனில் பேசியபடி எதிர்த்திசையில் வேகமாக ஓட்டி வந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர் வாலிகண்டபுரம் அருகே உள்ள தம்பை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 28) என்பவரை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement

கோவிந்தராஜுன் உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 05:37:06
Privacy-Data & cookie usage: