பெரம்பலூர் அருகே உள்ள சித்தளி

அசூருக்கு, 1.265 கோடி மதிப்பிலான சாலைப்பணி பூமி பூஜை

schedule
2018-02-21 | 18:46h
update
2026-06-26 | 07:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The Bhoomi Puja, a 1.265-crore road works for Sithali – Asur near Perambalur

பெரம்பலூர் அருகே 1 கோடியே 26.5 லட்சம் மதிப்பிலான சாலைப்பணியை குன்னம் எம்.எல்.ஏ. ஆர்.டி. இராமச்சந்திரன், சிதம்பரம் தொகுதி எம்.பி சந்திரகாசி தொடங்கி வைத்தனர்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் சித்தளி கிராமத்தில், பாரத பிரதமர் கிராம கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சித்தளி முதல் அசூர் வரைக்கும் 2.9 கி.மீ தூரம்உள்ள சாலை 1 கோடியே 26 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான தார் சாலை பணிக்கு இன்று பூமி பூஜை நடந்தது. பூமி பூஜையை பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி. ராமச்சந்திரன், சிதம்பரம் தொகுதி எம்.பி சந்திரகாசி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அதிமுக நிர்வாகிகள், சித்தளி அதிமுக பிரமுகர்கள் நாகராஜன், கணேசன், குன்னம் குணசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இத்திட்டத்தால், சித்தளி, அசூர் கிராம மக்கள் மற்றும் அவ்வழியாக அக்கம் பக்கம் செல்லும் கிராம வாசிகள் பயன்பெறுவார்கள்.

முன்னதாக, சித்தளி கிராமத்திற்குள் வந்த குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி ராமச்சந்திரனுக்கு வெடிகள் வெடித்து கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.06.2026 - 07:30:57
Privacy-Data & cookie usage: