நாமக்கல் ஆர்சி சர்ச்சில் கிறிஸ்து பிறப்பு விழா

schedule
2018-12-25 | 12:43h
update
2018-12-25 | 12:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The Birth of Christ in Namakkal RC Church

நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு 24ம் தேதி இரவு 11.45 மணிக்கு அருட்தந்தை லாரன்ஸ், பிரிட்டோ ஆகியோர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

Advertisement

நேற்று காலை 4 மணிக்கு மாரப்பநாயக்கன்பட்டி, 5 மணிக்கு தும்மங்குறிச்சி, வள்ளிபுரம் ஆகிய பகுதிகளில் அருட்தந்தை ஜான் அல்போன்ஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. காலை 9மணிக்கு கிறிஸ்து அரசர் ஆலயத்தில் அருள்தந்தை அருள்சுந்தர் மற்றும் ஜான் அல்போன்ஸ் தலைமையிலும் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் மாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊர்வலம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு பரமத்தி ரோடு, கோட்டை ரோடு, மெயின் ரோடு வழியாக மீண்டும் கிறிஸ்து அரசர் ஆலயத்திற்கு வந்தடைந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கிறிஸ்து அரசர் ஆலய பங்கு தந்தை மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரபகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.//படம் உண்டு.



Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.07.2026 - 05:00:44
Privacy-Data & cookie usage: